Volunteer Sign Up for Academic Year 2026-2027
தன்னார்வலர் பதிவுப் படிவம் 2026-2027
Introduction
2026-2027 கல்வியாண்டில் கற்பித்தல் மற்றும் பொதுத் தொண்டில் ஈடுபட விரும்பும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், தகுதி நோக்கிலும் மதிப்பிடப்படும். தமிழர்களாகிய நாம் இந்த உன்னதமான பணியில் ஒன்றிணைவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு — வாருங்கள், தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!! தமிழ் கற்பித்தல் பணிக்கான தன்னார்வலர்கள் வேண்டி - அழைப்பு அன்புசால் ஆசிரியர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள், கடந்த ஆண்டுகளில் தாங்கள் ஆற்றிய சீரிய தமிழ்ப்பணிகளின் மூலம் எண்ணற்ற மாணவ மணிகளின் வாழ்வினை ஒளிரச்செய்திருக்கிறீர்கள். தன்முனைப்போடு நீங்கள் புரிந்த அந்த தன்னார்வப் பணிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் சார்பாக நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்.
காமுறுவர் கற்றறிந் தார்.
என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாணாக்கர்களுக்கு கல்வியைக் கசடறக் கற்பித்து, அதனூடே பெறும் இன்பம் அளவிற்கரியது. எனவே, தாங்கள் அடுத்த கல்வியாண்டிலும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்ற வேண்டுகிறோம். சான் ரமோன் தமிழ்ப்பள்ளி (உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒரு அங்கம்), 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்பித்தல் பணியை தொடர இந்த படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் விருப்பத்தை பதிவிட்டு வழக்கம்போல் உங்கள் ஆதரவை நல்கிடுக! மொழி கற்பிப்போம்! மொழி காப்போம்!!
நன்றி, பள்ளி முதல்வர்கள்
- சான்ரமோன் தமிழ்ப்பள்ளி 2026-27 கல்வியாண்டு
